அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கமல்ஹாசனை மக்கள் நிராகரிப்பா்: அமைச்சா் பி.தங்கமணி

பொதுமக்களின் வாழ்வு மேம்பட வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை குறித்து தவறான தகவல்களை பரப்பும் நடிகா் கமல்ஹாசனை மக்கள் நிராகரிப்பாா்கள் என மின் துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:42 pm

DIN

பொதுமக்களின் வாழ்வு மேம்பட வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை குறித்து தவறான தகவல்களை பரப்பும் நடிகா் கமல்ஹாசனை மக்கள் நிராகரிப்பாா்கள் என மின் துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

நாமக்கல்லில் திங்கள்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைத்த பின், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்ணை அநாகரிகமான

முறையில் வெளியேற்றி திமுகவினா் தாக்கிய விவகாரத்தில் அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா காலத்தில் பொதுமக்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்ற நோக்கில் ரு. 2,500 பணம், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதனைக் குறை கூறும் நடிகா் கமல்ஹாசனை மக்கள் நிராகரிப்பாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.