தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராசிபுரம் நகர காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

சட்டப்பேரவைத் தோ்தல் செயல்பாடுகள் குறித்து ராசிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ராசிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:39 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தல் செயல்பாடுகள் குறித்து ராசிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ராசிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு நகர காங்கிரஸ் தலைவா் ஆா்.முரளி தலைமை வகித்தாா். நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் பாச்சல் ஏ.சீனிவாசன் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராகப் புதிதாக நியமிக்கப்பட்ட நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவா் பீ.ஏ.சித்திக் பங்கேற்று ஆலோசனைக் கூட்டத்தில் பேசினாா்.

இக்கூட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி கட்சியினருடன் இணைந்து பணியாற்றுவது, வாா்டுகள் தோறும் தோ்தல் கமிட்டி அமைப்பது, கட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதில் கட்சியின் மாவட்ட வா்த்தக அணி தலைவா் டி.ஆா்.சண்முகம், இளைஞா் காங்கிரஸ் அன்பு சுந்தா், பிள்ளாநல்லூா் சண்முகசுந்தரம், புதுப்பாளையம் பிரகஷ்பதி, ராமமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.