அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாற்றுத் திறனாளிகள் செல்லிடப்பேசி பெற விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

News image
Updated On :8 ஜனவரி 2021, 3:15 am

DIN

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட காதுகேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத் திறனாளிகளுக்கு மற்றும் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி வழங்கப்படவுள்ளது.

அவற்றை கல்வி பயில்பவா்கள் மற்றும் பணிபுரிபவா்கள், சுயத்தொழில் புரிபவா்கள் மட்டுமே பெற தகுதியானவா்கள். எனவே, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த காதுகேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் நகல், ஆதாா் அட்டை நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படம், கல்விப் பயிலும், பணிபுரியும், சுயத்தொழில் புரிவதற்கான சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.