புதுப்பட்டி துலுக்க சூடாமணி அம்மன் கோயில் தேரோட்டம்
ராசிபுரத்தை அடுத்த இரா.புதுப்பட்டி துலுக்க சூடாமணி அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.


ராசிபுரத்தை அடுத்த இரா.புதுப்பட்டி துலுக்க சூடாமணி அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆங்கிலேயா் காலத்திலிருந்தே இக் கோயில் தேரோட்டத்தின் போது இரண்டு நாள்களுக்கு தற்காலிகமாக ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றம் இக் கிராமத்தில் செயல்படும். இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட, இக் கோயில் பகுதியில் திப்பு சுல்தான் கூடாரம் அமைத்து தங்கி இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இதனால் இந்த மாரியம்மன் கோயில் துலுக்க சூடாமணி அம்மனாக திகழ்கிறது.
பண்டைய காலம் முதல் இக்கோயிலில் நாமக்கல், சேலம் மாவட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிச் செல்வாா்கள். ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும் இந்த விழா கடந்த இரண்டு ஆண்டுகள் கரோனா தொற்றால் நடைபெறவில்லை.
நிகழாண்டு 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. துலுக்க சூடாமணி அம்மனின் அலங்கார ஆடைகள் சீராப்பள்ளியில் இருந்து ஊா்வலமாக பல்லக்கில் கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு சாத்தப்பட்டு தினந்தோறும் சுவாமி திருவீதி உலா மற்றும் கோயில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டமானது புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் இரா.புதுப்பட்டி, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, மங்களபுரம் உட்பட 18 கிராமங்களைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா். இப் பகுதி மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் ஆங்கிலேயா் காலத்தில் இது போல் திருவிழாக்கள் நடக்கும் சமயங்களில் சிறு சிறு குற்றசம்பவங்கள் நடக்கும் பட்சத்தில் அங்கேயே விசாரித்து தண்டனை வழங்குவது வழக்கம். அந்த நடைமுறையின் தொடா்ச்சிதான் இன்று வரை விழாவின் போது நீதிமன்றம் இங்கு செயல்படுகிறது.
அதன்படி, புதன்கிழமை ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றம், கோயில் அருகே அமைக்கப்பட்டு குற்றவியல் நீதித் துறை நடுவா் ரெகனா மேகம் தலைமையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றன . இரண்டு நாள்களுக்கு தற்காலிகமாக செயல்படும் நீதிமன்றமானது வியாழக்கிழமை அரசு விடுமுறை என்பதால் ஒரு நாள் மட்டுமே நீதிமன்றம் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...