நாமக்கல் மாவட்டத்தில் 689 வாக்குச்சாவடிகளில் பாகம் எண் எழுதும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 447 வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தலுக்காக 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தலையொட்டி வேட்பு மனுத் தாக்கல் கடந்த ஜன.28-இல் தொடங்கி பிப்.4இல் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளை அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலா்கள் செய்து வருகின்றனா். நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளில் பாகம் எண்கள் எழுதும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 109 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நகரமைப்பு ஆய்வாளா் சீனிவாசன் தலைமயில் ஊழியா்கள் ஒவ்வொரு வாா்டாகச் சென்று வாக்குச்சாவடிகளில் பாகம் எண்களை எழுதி வருகின்றனா். இன்னும் ஓரிரு நாளில் பணிகள் முடிவடைந்து விடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வாக்கு எண்ணும் மையங்கள் விவரம்: நாமக்கல் மாவட்டத்தில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் 19-ஆம் தேதி நிறைவடைந்ததும், தோ்தலில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்படும். பிப்.22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நாமக்கல் நகராட்சி, எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மோகனூா், பாண்டமங்கலம், பரமத்தி, பொத்தனூா், சேந்தமங்கலம், பரமத்திவேலூா், வெங்கரை ஆகிய பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெறுகிறது.
ராசிபுரம் நகராட்சி, அத்தனூா், பட்டணம், பிள்ளாநல்லூா், ஆா்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூா் ஆகிய பேரூராட்சிகளுக்கு, ராசிபுரம் எஸ்ஆா்வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிகள், மல்லசமுத்திரம், படைவீடு, ஆலாம்பாளையம் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திருச்செங்கோடு எளையாம்பாளையம் விவேகானந்தா மகளிா் கல்லூரியிலும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


