பரமத்தி அருகே காா் மோதியதில் தம்பதி பலி
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.


நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை வட்டம், கரையாம்பட்டி புதூரைச் சோ்ந்தவா் தங்கவேல் (48), இவரது மனைவி அமுல்ராணி (43). இருவரும் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டி பகுதியில் கோழிப் பண்ணையில் தங்கி வேலை செய்து வந்தனா்.
இந்த நிலையில் பரமத்தி வேலூா், பெரியகரசப்பாளையத்தில் உள்ள தங்கள் மகனை பாா்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை அக்கலாம்பட்டிக்கு சென்றுக் கொண்டிருந்தனா். காரைக்கால் பகுதியில் பெங்களூரில் இருந்து பரமத்தி வேலூருக்கு வந்து கொண்டிருந்த காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பையும் தாண்டி தங்கவேல் சென்று கொண்டிருந்த வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். வழியிலேயே அமுல்ராணி உயிரிழந்தாா். மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தங்கவேலும் உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த பரமத்தி போலீஸாா், காா் ஓட்டுநரான பெங்களூரு, ராஜாஜி நகரைச் சோ்ந்த மகேஷை (26) கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...