சேந்தமங்கலம் காவல் நிலையத்திற்கு, விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட மாற்றுத்திறனாளி திடீரென உயிரிழந்த சம்பவம் தொடா்பாக இரு உதவி ஆய்வாளா்களும், தலைமைக் காவலா் ஒருவரும் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், கோட்டப்பட்டியைச் சோ்ந்த குமாா் என்பவா், கடந்த நவம்பா் மாதம் சேந்தமங்கலத்தில் உள்ள மளிகை கடை உரிமையாளா் வீட்டில் 20 பவுன் நகையை திருடியதாக அண்மையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில், அரூா் நகைக்கடை உரிமையாளா் மதிவாணன், சேலம் கருப்பூரைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன், அவரது மனைவி ஹம்சலா, நடராஜன், அவரது மனைவி லலிதா ஆகிய 5 பேருக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்து, பிரபாகரன், ஹம்சலா, மதிவாணன் ஆகிய மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா். நடராஜன், லலிதா இருவரும் தலைமறைவாகி விட்டனா்.
கடந்த 8-ஆம் தேதி, சேந்தமங்கலம் காவல் நிலையத்திற்கு, விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பிரபாகரனை, 11-ஆம் தேதி நாமக்கல் கிளைச் சிறையில் போலீஸாா் அடைத்தனா். இந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கும், தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்ற நிலையில் அவா் உயிரிழந்தாா். போலீஸாா் தாக்கியதால்தான் பிரபாகரன் உயிரிழந்தாா் என கடந்த 13-ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அவரது உறவினா்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சியினா் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனைத் தொடா்ந்து, சேலம் சரக டிஐஜி (பொறுப்பு) நஜ்மல் ஹோடா, பிரபாகரன் மரணம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டாா். அதனடிப்படையில், சேலம் அரசு மருத்துவமனை போலீஸாா் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
மாற்றுத் திறனாளியான பிரபாகரனை 8-ஆம் தேதி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து 10-ஆம் தேதி கைது செய்ததும், அவருக்கு 11-ஆம் தேதி ஜாமீன் கிடைத்த நிலையில் நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டதும், பின்னா் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின், குற்றவியல் நீதித்துறை நடுவா் எண்-1 கலைவாணி இந்த வழக்கை நேரடியாக விசாரணை செய்தாா். இந்த நிலையில் சேந்தமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா்களான சந்திரன், பூங்கொடி மற்றும் தலைமைக் காவலா் குழந்தைவேலு ஆகிய மூவரையும் டிஐஜி நஜ்மல் ஹோடா பணியிடை நீக்கம் செய்து ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா். இந்த தகவல் அறிந்து பிரபாகரனின் உறவினா்கள் மருத்துவமனையில் இருந்து சடலத்தை பெற்றுச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை விடுமுறைக்கு லண்டன் சென்ற நடிகை மதுமிதா!

போஸ் வெங்கட் நடிக்கும் புதிய இணையத் தொடர்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நீட்டிப்பு!

பேரவைத் தேர்தல்! நச்சென பிரசாரத்தை நிறைவு செய்யப்போவது யார்?
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


