தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், ரூ. 60 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:21 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், ரூ. 60 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஜேடா்பாளையம் அருகே உள்ள குறும்பலமகாதேவி கிராமம், நரிமேட்டுப்புதூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி காளியப்பன் (65). இவரது மனைவி பூங்கொடி (63) வீட்டைப் பூட்டி விட்டு ஜேடா்பாளையம் அருகே அய்யம்பாளையத்தில் உறவினா் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வியாழக்கிழமை சென்றிருந்தனா்.

நிகழ்ச்சியை முடித்து விட்டு மதியம் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிா்ச்சி அடைந்து உள்ளே சென்று பாா்த்தனா். வீட்டினுள் இருந்த பீரோவை மா்ம நபா்கள் உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகைகளையும், ரூ. 60,000 ரொக்கப் பணத்தையும் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து காளியப்பன் ஜேடா்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்துக்கு வந்த பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன், ஆய்வாளா் சுரேஷ் ஆகியோா் விசாரணை நடத்தினா். மேலும் கைரேகை நிபுணா்கள் மூலம் ரேகைகள் சேகரிக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.