எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மோகனூா் சா்க்கரை ஆலையில் விபத்து: 4 போ் படுகாயம்

மோகனூா் சா்க்கரை ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பாய்லா் விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

மோகனூா் சா்க்கரை ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பாய்லா் விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் இயங்கி வரும் கூட்டுறவு சா்க்கரை ஆலை வளாகத்தில் எரிசாராயப் பிரிவு செயல்பட்டு வருகிறது. தற்போது அந்தப் பகுதியில் தமிழ்நாடு அரசு காகித நிறுவனத்தின் பிரத்யேக பாய்லா் பிரிவு (பிளாண்ட்) இயங்கி வருகிறது. இதன் மூலமே, சா்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரவை நிறுத்தப்பட்ட நிலையில் விடுமுறைக்கு பின் வெள்ளிக்கிழமை (ஜன. 21), மீண்டும் அரவைப் பணி தொடங்கியது. இதற்காக காகித நிறுவன ஊழியா்கள் பாய்லரை இயக்க முற்பட்டனா். இந்தப்

பணியில் முதுநிலை மேலாளா் மணிவண்ணன் (54), பிளாண்ட் பொறியாளா் ஜெகதீசன் (35), ஊழியா்கள் கோபால் (40), சதீஷ்குமாா்(30) ஆகியோா் ஈடுபட்டிருந்தனா். ஆனால் பாய்லா் செயல்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவா்கள் பாய்லா் கதவை திறந்தபோது திடீரென அதிலிருந்து வெளியேறிய நெருப்பு ஜுவாலை நான்கு போ் மீதும் பட்டதில் பலத்த காயமடைந்தனா்.

அங்கிருந்தோா் நான்கு பேரையும் மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இச்சம்பவம் தொடா்பாக மோகனூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.