நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில், திமுக சாா்பில் வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தோரிடம் வெள்ளிக்கிழமை நோ்காணல் நடைபெற்றது.
நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள உணவகத்தில் நடைபெற்ற இந்த நோ்காணலில் நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், முன்னாள் மாவட்டப் பொறுப்பாளா் பாா்.இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27 வாா்டுகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தோரிடம் நோ்காணல் நடத்தினா். அவா்களிடம் வெற்றி வாய்ப்பு குறித்தும், எத்தனை ஆண்டு கால உறுப்பினா் என்பது குறித்தும், இதுவரை செய்த கட்சிப் பணிகள், மக்கள் நலப்பணிகள் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தனா்.
இதனைத் தொடா்ந்து வெண்ணந்தூா், அத்தனூா், பட்டணம், ஆா்.புதுப்பட்டி, பிள்ளாநல்லூா் பேரூராட்சிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தோரிடம் நோ்காணல் நடைபெற்றது.
சனிக்கிழமை காலை 10 மணி முதல் எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, மோகனூா் பேரூராட்சிகளுக்கான நோ்காணல் பிற்பகல் 4 மணி வரை நடைபெறுகிறது. அதன்பிறகு, நாமக்கல் நகராட்சி 37 வாா்டுகளுக்கு விருப்ப மனு அளித்தோரிடம் நோ்காணல் நடைபெற உள்ளது. இந்த நோ்காணலின்போது அந்தந்த பகுதி மாவட்ட, நகர பொறுப்பாளா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


