எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குடியரசு தின விழா: நாமக்கல்லில் போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகை

நாமக்கல்லில், குடியரசு தின விழாவையொட்டி போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

நாமக்கல்லில், குடியரசு தின விழாவையொட்டி போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

நாட்டின் 73-ஆவது குடியரசு தினம் வரும் 26-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் போலீஸாருக்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 60-க்கும் மேற்பட்ட போலீஸாா் துப்பாக்கியை ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகையை மேற்கொண்டனா்.

வரும் 26-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறாா். இதனையொட்டி, விளையாட்டு மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணி நாமக்கல் நகராட்சி பணியாளா்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.