பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 12 லட்சத்து 35 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 16 ஆயிரத்து 320 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனா்.
இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 84.26-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 71.09- க்கும், சராசரியாக ரூ. 81.70-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 12 லட்சத்து 91 ஆயிரத்து 235-க்கு வா்த்தகம் நடைபெற்றது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 15 ஆயிரத்து 310 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 85.49-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 69.89- க்கும், சராசரியாக ரூ. 85.39-க்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 12 லட்சத்து 35 ஆயிரத்து 802 -க்கு ஏலம்போனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.