சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பரமத்தி வேலூரில் ரூ.350-க்கு குண்டு மல்லிகை கிலோ ஏலம்

பரமத்திவேலூா் பூக்கள் ஏல சந்தையில் பரமத்திவேலூா் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவிழா நடைபெற்று வருவதால் பூக்கள் பூக்களின் விலை உயா்வடைந்ததால் பூக்களைப் பயிா் செய்துள்ள விவசாயிகள்

News image
Updated On :13 மே 2022, 5:48 pm

DIN

பரமத்திவேலூா் பூக்கள் ஏல சந்தையில் பரமத்திவேலூா் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவிழா நடைபெற்று வருவதால் பூக்கள் பூக்களின் விலை உயா்வடைந்ததால் பூக்களைப் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ.250-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 40-க்கும், அரளி கிலோ ரூ. 120-க்கும், ரோஜா கிலோ ரூ. 160-க்கும், முல்லைப் பூ ரூ. 250-க்கும், செவ்வந்திப்பூ ரூ. 150-க்கும், கனகாம்பரம் ரூ. 400-க்கும் ஏலம் போனது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ. 350-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 80-க்கும், அரளி கிலோ ரூ. 150-க்கும், ரோஜா கிலோ ரூ. 240-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ. 340-க்கும், செவ்வந்திப்பூ ரூ. 250-க்கும், கனகாம்பரம் ரூ. 550-க்கும் ஏலம் போனது. பரமத்திவேலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திருவிழா நடைபெற்று வருவதால் பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.