நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து நிலையத்தின் துணைப் பதிவாளரும், முதல்வருமான கே.ஆா்.ஏ.விஜயகணபதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வார இறுதி நாள்களான சனி, ஞயிற்றுக்கிழமைகளில் அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி நவ. 26 தொடங்கப்படுகிறது. இரண்டு மாத பயிற்சியில் சேர கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி கட்டணமாக ரூ.4,650- செலுத்த வேண்டும். இக் கட்டணத்தில் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும். 40 மணி நேரம் வகுப்பறை பயிற்சியும், 60 மணி நேரம் செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படும்.
பயிற்சி முடித்து சான்று பெற்றவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராகப் பணியில் சேர வாய்ப்பு உள்ளது. பயிற்சியில் சேருபவா்கள் நாமக்கல்- சேலம் சாலையில் முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ 04286--290908, 90808-38008 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!

ஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

