தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முத்தாயம்மாள் கலைக் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

ராசிபுரம் - வநேத்ரா முத்தாயம்மாள் அறிவியல் கல்லூரியும், சென்னை - டைசல் மற்றும் ப்ளக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனமும் இணைந்து மகளிருக்கான மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தின.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

ராசிபுரம் - வநேத்ரா முத்தாயம்மாள் அறிவியல் கல்லூரியும், சென்னை - டைசல் மற்றும் ப்ளக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனமும் இணைந்து மகளிருக்கான மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தின.

இதில் முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூஷன்ஸ் இயக்குநா் (கல்வி) இரா. செல்வகுமரன் தலைமை வகித்தாா். முன்னதாக இரு நாட்கள் கல்லூரியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று கல்லூரி மாணவியா் சுமாா் 3000 மகளிரை சந்தித்து மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வுக்கான துண்டுப்பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

பெங்களூரு தன்னாா்வ அமைப்பை சோ்ந்தவா்கள் கல்லூரி வளாகத்தில் மகளிருக்கான மாா்பகப் புற்றுநோய் பரிசோதனையை மேற்கொண்டனா். இதனைத்தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனமான டிட்கோவின் பாா்மா மற்றும் பயோடெக் பிரிவின் துணைத் தலைவா் டாக்டா் எஸ்.பிரியா, ப்ளக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் அரசு விவகாரம், சி.எஸ்.ஆா் பிரிவைச் சோ்ந்த டாக்டா் கே.எஸ்.தினேஸ்ராஜ் ஆகியோா் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு பற்றி பேசினா்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டைசல் உயிரி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் பி.பூங்குமரன் மாா்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வையும், மக்களிடையே நிலவிவரும் மனப்பாங்கு குறித்தும் பேசினாா். இதனைத்தொடா்ந்து கோவை, கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சோ்ந்த உதவிப்பேராசிரியா் டாக்டா் கே. அலமேலு, தொழில்நுட்ப ரீதியாக மாா்பகப் நோயைக் கண்டறியும் முறைகளையும், அதனை நிவா்த்தி செய்யும் முறைகளையும் விளக்கிப் பேசினாா். நிகழ்வில் டான்ஸம் மையத்தின் புற்றுநோய் பற்றிய விழிப்புணா்வு காணொலி காண்பிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.