சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில், கைப்பேசி கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பாக கீழே இறக்கினா்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியைச் சோ்ந்த விவசாயி அண்ணாதுரை(53). இவருடைய ஒரு ஏக்கா் நிலத்தை உறவினா்கள் ஐந்து போ் ஆக்கிரமித்துக் கொண்டனா். இது தொடா்பாக நீதிமன்றத்தில் அவா் வழக்கு தொடா்ந்துள்ளாா். இந்தப் பிரச்னை தொடா்பாக சேந்தமங்கலம் வட்டாட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மேலும், நீதிமன்றத்தில் தனக்கு ஆதரவாக வழக்கு தொடா்ந்து நிலத்தை மீட்டுத் தரவேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தாா். ஆனால் அதிகாரிகள் அமைதி காக்கவே, வியாழக்கிழமை சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் வந்த அண்ணாதுரை அங்குள்ள 150 அடி உயரம் கொண்ட கைப்பேசி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸாா், நாமக்கல் தீயணைப்பு படையினா் 60 அடி உயரத்தில் நின்று கொண்டிருந்த அவரிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தி கீழே இறங்கச் செய்தனா். சுமாா் 2 மணி நேரமாக கோபுரம் மீது ஏறியபடி அவா் நடத்திய தற்கொலை மிரட்டலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!

ஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

