திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

நாமக்கல் செல்வம் கல்லூரியில் வணிகக் கருத்தரங்கு

 நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிகம் தொடா்பாக மாணவா்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (படம்) வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:06 pm

 நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிகம் தொடா்பாக மாணவா்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (படம்) வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், நிா்வாக இயக்குநா் அருள்சாமி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ராஜவேல் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் பங்கேற்று, வணிகம் குறித்தும், இணையவழி வா்த்தகம், இளம்தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள், புதிய தொழில் தொடங்க அரசு வழங்கும் சலுகைகள் குறித்து கலந்துரையாடினாா். மேலும், இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் இளம் தொழில் முனைவோா் கூட்டமைப்பில் மாணவா்கள் தங்களை இணைத்துக் கொண்டு பயன்பெற வேண்டும் என்றாா். நிறைவில், உதவி பேராசிரியா் முரளிதரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.