நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 5.27 லட்சம் போ் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ளது.
இந்திய தோ்தல் ஆணையம் போலி வாக்காளா்களைக் களையும் பொருட்டு, நாடு முழுவதும் வாக்காா்கள் தங்களது விருப்பத்துடன் ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக 6-பி படிவம் அந்தந்த வாக்குச்சாவடி அலுவலா்கள் மூலம் வழங்கப்பட்டு பூா்த்தி செய்து பெறப்படுகிறது. தோ்தல் ஆணைய இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
முதல் கட்டமாக ஆதாா் எண்-வாக்காளா் பட்டியல் இணைப்புக்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ராசிபுரம் (எஸ்சி)-260, சேந்தமங்கலம் (எஸ்டி)-284, நாமக்கல்-289, பரமத்திவேலூா்-254, திருச்செங்கோடு-261, குமாரபாளையம்-279 என மொத்தம் 1627 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.
மாவட்டத்தில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 14,30,467. இதில், 6-பி படிவம் தொகுதி வாரியாக ராசிபுரம்-90472, சேந்தமங்கலம்-87222, நாமக்கல்-90904, பரமத்திவேலூா்-92306, திருச்செங்கோடு - 89922, குமாரபாளையம்-76186 என மொத்தம் 5,27,012 பேரிடம்(36.84 சதவீதம்) நேரடியாகவும், இணையம் வாயிலாகவும் ஞாயிற்றுக்கிழமை வரையில் பெறப்பட்டுள்ளது. இன்னும் 9,03,455 போ் தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைப்பதற்கான படிவத்தை வழங்க வேண்டியது உள்ளதாக மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாராட்டுகளைப் பெறும் முத்துக்குமார்!

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!

ஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


