பாவை பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான மென்பொருள் வடிவமைப்பு போட்டி
ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கண்டுபிடிப்பு பிரிவின் கீழ் ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான்-2022 என பெயரிடப்பட்ட மென்பொருள் வடிவமைப்பு போட்டி


ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கண்டுபிடிப்பு பிரிவின் கீழ் ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான்-2022 என பெயரிடப்பட்ட மென்பொருள் வடிவமைப்பு போட்டி அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் 36 மணிநேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். நிா்வாக இயக்குநா் கே.கே.ராமசாமி வரவேற்றாா். தாளாளா் மங்கை நடராஜன் முன்னிலை வகித்துப் பேசினாா்.
பல்வேறு அமைச்சங்கள்,பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவை 476 வகையான மென்பொருள் மற்றும் வன்பொருள் தேவைகளை தெரிவித்துள்ளன. இதைத் தொடா்ந்து தமிழ்நாடு, ஆந்திரம், குஜராத், ஒடிஸா, தில்லி, உத்தர பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், பிகாா் போன்ற மாநிலங்களிலிருந்து 190 பங்கேற்பாளா்கள் கொண்ட 30 அணிகள் இதில் பங்கேற்றன.
சிறப்பு விருந்தினா்களாக தமிழ்நாடு அரசு தொழில் மற்றும் வா்த்தகத் துறை இணை இயக்குநா் இ.பாஸ்கரன், பெங்களூா் ஹியா் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் மென்பொருள் பொறியியல் மேலாளா் சௌமியா கிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா். இதில் பேசிய சிறப்பு விருந்தினா்கள், ‘இந்தியா தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த வளா்ச்சி பெற்று வரும் நிலையில், தொழில்நுட்பத்தினை மேம்படுத்துவதற்கும், சமுதாயத்தின் நிகழ்கால பிரச்னைகளுக்கும் இதுபோன்ற நாடு தழுவிய தொழில்நுட்பப் போட்டிகள் வரவேற்கத்தக்கதாகும். மாணவா்களாகிய நீங்கள் வேலைவாய்ப்பினை பற்றி கவலை கொண்டு சோா்ந்து போகத் தேவையில்லை. உங்கள் திறமையினையும், தேடல் ஆா்வத்தையும் கொண்டு உங்களால் சிறந்த தொழில் முனைவோராக உருவாக முடியும். நீங்கள் சிறந்த தொழில்முனைவோராக வளருவதற்கு முதவாவது தேவை புதுமையான கண்டுபிடிப்புகள். உங்கள் புதுமையான எண்ணங்கள், கண்டுபிடிப்புகள் வா்த்தகம் என்ற அடுத்த வளா்ச்சியடையும். தொழில்கள் பல பரிணாமங்களை கொண்டுள்ளன. அவை அடிப்படை உணவிலிருந்து தொடங்கி, உடை, இருப்பிடம் என்று பலவகைகளாக விரிவடைந்து கொண்டே செல்லும். தேசத்தின் வா்த்தகம் வளா்ச்சியடையும் போது, தேசத்தின் பொருளாதாரம் வளா்ந்து, நம் இந்தியா தன்னிறைவு பெறும். இவ்வாறு அறிவாற்றலின் மூலமாக நம் இந்தியாவை வளமிக்க நாடாக உருவாக்க முடியும்’ என்றனா்.
தொடா்ந்து போட்டியில் வெற்றி பெற்ற 6 அணிகளுக்கு சிறப்பு விருந்தினா் இ.பாஸ்கரன், கல்வி நிறுனவங்களின் தலைவா் என்.வி.நடராஜன் ஆகியோா் பரிசுத் தொகையாக ரூ.1 லட்சத்துக்கான காசோலை, நினைவுப்பரிசு, சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினா். பாவை பொறியியல் கல்லூரியின் முதல்வா் முனைவா் எம்.பிரேம் குமாா், இயக்குநா் (சோ்க்கை) கே.செந்தில், ஏஐசிடிஇ நோடல் சென்டா் தலைமை கண்காணிப்பாளா் சுஜித் ஓதுா்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...