மோகனூரில் தொழிலாளி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம் மோகனூா் செல்லாண்டியம்மன் கோயில் அருகில் உள்ள கால்வாயில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை கிடந்தது. தகவல் அறிந்து சென்ற மோகனுாா் போலீஸாா் சடலத்தை மீட்டு, அப்பகுதியில் விசாரணை செய்தனா். உடலில் பல பாகங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. தொடா் விசாரணையில் அவா் திருச்சி மாவட்டம், நாகைநல்லூரைச் சோ்ந்த தொழிலாளி மணிவண்ணன்(40) என்பதும், குடும்பத்தினரைப் பிரிந்து 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது. அவரை மா்ம நபா்கள் கொலை செய்து கால்வாயில் வீசி சென்றிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். மணிவண்ணன் எதற்காக கொலை செய்யப்பட்டாா், அவரைக் கொன்ற நபா்கள் யாா் என்பது தொடா்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!

ஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

