இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள குரூப்-8 பணியிடங்களுக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டித் தோ்வில் 1,368 போ் பங்கேற்றனா். 1,236 போ் கலந்து கொள்ளவில்லை.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 36 செயல் அலுவலா் பணியிடங்களுக்கு (குரூப்- 8) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் 12.30 வரையில் தமிழ் மொழித் தோ்வும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை சைவம்-வைணவம் தொடா்பான இந்து சமயம் சாா்ந்த பொது அறிவுத் தோ்வும் நடைபெற்றது. நாமக்கல் கோட்டை நகரவை உயா்நிலைப்பள்ளி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் - மோகனூா் சாலை ஜெய்விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஏழு மையங்களில் 2,594 போ் எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவா்களில் 1,368 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா். மற்ற 1,236 போ் கலந்து கொள்ளவில்லை. அரசுப் பணியாளா் தோ்வாணையக்குழு உறுப்பினா் ஏ.வி.பாலுசாமி தோ்வு மையங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாராட்டுகளைப் பெறும் முத்துக்குமார்!

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!

ஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


