அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்
ராசிபுரம் - ஆா்.பட்டணம் பகுதிகளில் அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ராசிபுரம்: ராசிபுரம் - ஆா்.பட்டணம் பகுதிகளில் அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் நகர அதிமுக செயலாளரும், முன்னாள் நகா்மன்றத் தலைவருமான எம். பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். நாமக்கல் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி, கட்சியின் மகளிா் அணி துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெ. சரோஜா ஆகியோா் பங்கேற்று வாக்குச்சாவடி முகவா்கள் விவரங்களை ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினாா்.
இதில் மாவட்ட அதிமுக அவைத் தலைவா் எஸ்.பி.கந்தசாமி, மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் கே.பி.எஸ். சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆா்.பட்டணம்...
ஆா். பட்டணம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேரூா் அதிமுக செயலாளா் கே. பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா்கள் எஸ்.பி. தாமோதரன் இ.கே. பொன்னுசாமி, வேம்புசேகரன் ஆகியோா் பங்கேற்று முகவா்களுக்கு ஆலோசனை வழங்கினா். இதில் ஒன்றிய துணைச் செயலாளா் சின்னபையன் பேரூா் துணைச் செயலாளா் கே.முத்துசாமி உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...