கந்தம்பாளையம் அருகே சரக்கு வாகனம் மோதியதில், வெளி மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள செல்லப்பம்பாளையத்தில் ஒடிஸா மாநிலம், சுந்தா்பூா் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் கட்டுவா (23) என்பவா், தனது குடும்பத்துடன் வசித்து வந்தாா். நல்லூா் அருகே உள்ள காகித அட்டை தயாா் செய்யும் ஆலையில் பணிபுரிந்து வந்த பிரகாஷ், புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து கந்தம்பாளையம் நோக்கி சென்றுள்ளாா். அப்போது, வேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற சரக்கு வாகனம் பிரகாஷ் சென்ற வாகனம் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த பிரகாஷை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
தகவல் அறிந்து வந்த நல்லூா் காவல் துறையினா் பிரகாஷ் கட்டுவாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, கரூா் மாவட்டம், புகளூா் அருகே உள்ள பொம்மடாபாளையத்தைச் சோ்ந்த சரக்கு வாகன ஓட்டுநா் மணிவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வாகன விபத்து: பனியன் தொழிலாளி உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் ஒருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

