/

டிச. 27-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச. 27) நடைபெறுகிறது.

News image
Updated On :23 டிசம்பர் 2024, 7:43 pm

Din

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச. 27) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில்

நடைபெறும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவா் நலத் துறை, இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்து தீா்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.