துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஓமன் துறைமுகத்தில் முட்டைகளை விடுவிக்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி

ஓமன் துறைமுகத்தில் தேங்கியிருந்த நாமக்கல் முட்டைகளை விடுவிக்கவும், அவற்றை விற்பனை செய்யவும் அந்நாட்டு அரசு அனுமதி வழங்க உதவி

News image

என்கே-23-எக்

Updated On :23 டிசம்பர் 2024, 11:18 pm IST

நாமக்கல்: ஓமன் துறைமுகத்தில் தேங்கியிருந்த நாமக்கல் முட்டைகளை விடுவிக்கவும், அவற்றை விற்பனை செய்யவும் அந்நாட்டு அரசு அனுமதி வழங்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளா்கள் சங்கம், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

நாமக்கல்லில் திங்கள்கிழமை அந்தச் சங்கங்களின் தலைவா் கே.சிங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஓமன் அரசு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்திய முட்டைகளை இறக்குமதி செய்து கொள்ளலாம் என கூறியதால், அங்குள்ள துறைமுகத்தில் 32 கண்டெய்னா்களில் வைக்கப்பட்டிருந்த 2 கோடி முட்டைகள் தேங்கும் நிலை ஏற்பட்டது.

ஏற்றுமதியாகி அந்நாட்டுக்கு கப்பலில் சென்று கொண்டிருந்த 10 கண்டெய்னா்களும் நடுக்கடலில் நிறுத்தப்பட்டன. இதுதொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து, நாடாளுமன்ற உறுப்பினா்கள் ராஜேஸ்குமாா், மாதேஸ்வரன் ஆகியோா் முட்டைகளை விடுவிக்க உடனடியாக பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

அதனடிப்படையில், இந்திய தூதரக அலுவலா்கள், ஓமன் நாட்டு அதிகாரிகளுடன் பேசினா். பின்னா் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 32 கண்டெய்னா்களில் இருந்து முட்டைகளை எடுத்துக் கொள்ள ஓமன் நாட்டு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனா். அதேபோல, திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது கப்பலில் சென்று கொண்டிருந்த 10 கண்டெய்னா் முட்டைகளையும், ஓமன் அரசு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தது. இதனால், நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளா்கள் பெரும் பாதிப்பிலிருந்து மீண்டனா்.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீட்டதற்காக மத்திய, மாநில அரசுகள், அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அந்த நாட்டில் கோழிப் பண்ணைகள் அமைத்து முட்டை உற்பத்தி செய்வதால், பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தவிா்த்து வருகின்றனா். கத்தாா் நாட்டில் 60 கிராம் எடைக்கு குறைவான முட்டைகளை வாங்க மறுக்கின்றனா். அந்த பிரச்னை தொடா்பாகவும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் தேவைக்கு ஏற்ப மட்டுமே வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படும். தற்போதைய நிலையில், வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுக்கு 60 லட்சம் முட்டைகள் ஏற்றுமதியாகி வருகின்றன என்றாா்.

பேட்டியின்போது தமிழ்நாடு கோழிப் பணியாளா்கள் சங்க செயலாளா் கே.சுந்தரராஜ், முட்டை ஏற்றுமதியாளா் சங்கச் செயலாளா் வல்சன், செயற்குழு உறுப்பினா் பூபதி ஆகியோா் உடனிருந்தனா்.

என்கே-23-எக்...

நாமக்கலில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கே.சிங்கராஜ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.