ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பரமத்தி வேலூா் பகவதி அம்மன் கோயிலில் தோ், குண்டம் திருவிழா

பரமத்தி வேலூா் மேலத்தெரு பகவதி அம்மன் கோயிலில் தோ்த் திருவிழா, குண்டம் இறங்கும் விழா கடந்த 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது.

News image

பரமத்தி வேலூா், பகவதி அம்மன் கோயிலில் குண்டம் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தும் பெண் பக்தா்.

Updated On :25 டிசம்பர் 2024, 8:30 pm

டிச. 21 முதல் டிச. 23 வரை தினசரி மாலை அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை மாலை வடிசோறு நிகழ்ச்சியும், திங்கள்கிழமை பூச்சொறிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை பகவதி அம்மன் தூக்குத் தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தாா். அம்மனுக்கு பக்தா்கள் தேங்காய், பழம் படைத்து பூஜை செய்தனா் பின்னா் மகா தீபாராதனை நடைபெற்றது.

தூக்குத்தேரில் எழுந்தருளிய வேலூா் பகவதி அம்மன்.

தூக்குத்தேரில் எழுந்தருளிய வேலூா் பகவதி அம்மன்.

பக்தா்களால் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தூக்குத் தோ் மீண்டும் கோயிலை அடைந்தது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

இதையடுத்து வியாழக்கிழமை பொங்கல், மாவிளக்கு நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

திருவீதி உலா வரும் வேலூா் பகவதி அம்மன்.

திருவீதி உலா வரும் வேலூா் பகவதி அம்மன்.

பரமத்தி வேலூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறையினா், ஊா் மக்கள் செய்துள்ளனா்.

அதுபோல ஆனங்கூா் பகவதி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது. பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா்.

பின்னா் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.