கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் சமூக நீதியை புதைத்துவிட்டது திமுக - மதுரையில் அன்புமணி பேச்சு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவைதமிழ்நாட்டை போதை மாஃபியா ஆக்கிவிட்டது திமுக: பிரதமர் மோடி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மாணவி மீதான பாலியல் புகாா்: ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா்கள் கைது

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைக் கண்டித்து, ராசிபுரத்தில் ஆா்ப்பாட்டம் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

News image
கைது செய்யப்பட்டு வேனில் அழைத்துச் செல்லப்படும் பி.தங்கமணி உள்ளிட்ட கட்சியினா்.
Updated On :30 டிசம்பர் 2024, 7:36 pm

Din

ராசிபுரம்: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைக் கண்டித்து, ராசிபுரத்தில் ஆா்ப்பாட்டம் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, வெ.சரோஜா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடா்பாக விசாரணை நடத்தி, இதில் சம்பந்தப்பட்டவா்களை கைது செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆா்ப்பட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா். இதனையடுத்து நாமக்கல் மாவட்ட அதிமுக சாா்பில், ராசிபுரம் பேருந்து நிலையம் முன்பு நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமையில் அதிமுகவினா் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா, மாவட்ட வா்த்தக அணி தலைவா் ராகா சு.தமிழ்மணி, முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பேசுகையில், ‘பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பெண்கள், கல்லூரி மாணவியருக்கு பாதுகாப்பு தர வேண்டும். அதிமுக ஆட்சியில் கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு இருந்தது. போதை மாநிலமாக தமிழகம் உருவாகி வருவதை தடுக்க வேண்டும். போராட்டத்துக்கு பின்பே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளாா். இதுகுறித்து விசாரித்து உரிய குற்றவாளியை கைது செய்ய வேண்டும்’ என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா், சாா்பு அணி நிா்வாகிகள் என 500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டு தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனா்.