நாமக்கல்: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் அதிகாலை வரை சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.
நாமக்கல்-துறையூா் சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் ஆலயத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நடைபெற்ற திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். இதேபோன்று நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள தமிழ் பாப்திஸ்து திருச்சபையிலும், கணேசபுரம் சிஎஸ்ஐ ஆலயத்திலும், என்ஜிஓஓ காலனி ஆா்.சி.தேவாலயத்திலும் 2024 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து கிறிஸ்தவா்கள் ஒருவருக்கொருவா் இனிப்புகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.