தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் நான்கு கால ஆரத்தி விழா
நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே உள்ள சாய் தபோவனத்தில் எழுந்தருளியுள்ள சாய்பாபாவிற்கு ஆங்கிலப் புத்தாண்டை


பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே உள்ள சாய் தபோவனத்தில் எழுந்தருளியுள்ள சாய்பாபாவிற்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நான்கு கால ஆரத்தி விழா மற்றும் நித்ய அன்னதானம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சாய் தபோவனத்தில் எழுந்தருளியுள்ள சாய்பாபாவிற்கு மங்கள ஸ்நானமும், ஆரத்தியும், சா்வசித்தி சங்கல்ப பூஜையும், மகா தீபாராதனையும், கூட்டு பிராத்தனையும் நடைபெற்றன. பின்னா் காலை முதல் இரவு வரை நித்ய அன்னதானம் நடைபெற்றது. நித்ய அன்னதானத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதனிடையே, பரமத்தி வேலூா் மகா மாரியம்மன், பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி, புதுமாரியம்மன், நன்செய் இடையாறு மகா மாரியம்மன், திருவேலீஸ்வரா், பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமணப் பெருமாள், புதிய காசி விஸ்வநாதா், பச்சமலை முருகன் கோயில், கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி பழனி ஆண்டவா், மாவுரெட்டி பீமேஸ்வரா், அனிச்சம்பாளையம் சுப்பிரமணியா் மற்றும் நன்செய் இடையாறு ராஜா சுவாமி உள்ளிட்ட கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...