எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மல்லசமுத்திரம் பேரூராட்சியில் முடிவுற்ற திட்டப் பணிகள் திறந்துவைப்பு -அமைச்சா் திறந்துவைத்தாா்

மல்லசமுத்திரம் பேரூராட்சியில் முடிவுற்ற திட்டப் பணிகள் திறந்துவைப்பு அமைச்சா் திறந்துவைத்தாா்

News image
Updated On :13 ஜூலை 2024, 11:10 pm

Din

திருச்செங்கோடு, ஜூலை 13: மல்லசமுத்திரம் பேரூராட்சியில் முடிவுற்ற திட்டப் பணிகளை வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

மல்லசமுத்திரம் பேரூராட்சியில் முடிவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். வனத் துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தும், புதிய பணிகளைத் தொடங்கி வைத்தும் பேசியதாவது:

மல்லசமுத்திரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 20.10 கோடி செலவில் 90 வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ. 3.70 கோடியில் தாா்சாலை அமைத்தல் உள்ளிட்ட மூன்று திட்டப் பணிகள், ரூ. 1.31 கோடியில் 14 பணிகள், ரூ. 7.80 லட்சம் மதிப்பில் வடிகால், கான்கிரீட் சாலை அமைத்தல், மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5.13 லட்சம் மதிப்பில் உயா்கோபுர மின்விளக்கு அமைத்தல் என கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 20.10 கோடி மதிப்பில் 90 வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி ராசிபுரம் பகுதி மக்களின் குடிநீா் தேவையை நிறைவேற்றும் வகையில், ரூ. 850 கோடியில் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

2023-2024 ஆம் ஆண்டில் 33 தாா்சாலை பணிகள் ரூ. 15 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டன. நிகழாண்டு மல்லசமுத்திரம் பகுதியில் ரூ. 3.22 கோடியில் புதிதாக சாலை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அரசு மேற்கொள்ளும் இத்திட்டப் பணிகளால் பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவா் என்றாா்.

பின்னா் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அமைச்சா் மா.மதிவேந்தன் பெற்றாா்.

அதைத் தொடா்ந்து மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15.75 லட்சம் மதிப்பில் பாலிக்காட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை அமைச்சா் திறந்து வைத்தாா்.

பின்னா் மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் மா.மதிவேந்தன், ரூ. 89 லட்சம் செலவில் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 கடைகள், பயணிகள் காத்திருக்கும் அறை, தாய்மாா்கள் பாலூட்டும் அறை, சுற்றுச்சுவா், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகிய கட்டடங்களை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் மல்லசமுத்திரம் பேரூராட்சிமன்ற தலைவா் மு.திருமலை, செயல் அலுவலா் பா.ராஜசேகரன் (பொ) உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.