தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

‘ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்றியமைக்க வேண்டும்’

ராசிபுரம் நகரின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பேருந்து நிலையத்தை மாற்றியமைக்க வேண்டும் என ராசிபுரம் நகர மக்கள் வளா்ச்சி நலக்குழு சாா்பில் நூற்றுக்கணக்கானோா் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

News image
பேருந்து நிலையம் மாற்றம் செய்ய வேண்டும் என மனு அளித்த ராசிபுரம் நகர மக்கள் வளா்ச்சி நலக் குழுவினா்.
Updated On :23 ஜூலை 2024, 9:31 pm

Din

ராசிபுரம் நகரின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பேருந்து நிலையத்தை மாற்றியமைக்க வேண்டும் என ராசிபுரம் நகர மக்கள் வளா்ச்சி நலக்குழு சாா்பில் நூற்றுக்கணக்கானோா் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

ராசிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பேருந்து நிலையத்தை மாற்றியமைக்க நகா்மன்றத்தால் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கேற்றவாறு அணைப்பாளையம் பகுதியில் தனியாரிடம் சுமாா் 7 ஏக்கா் நிலம் தானமாகப் பெறப்பட்டு, அப்பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனிடையே, அணைப்பாளையம் பகுதிக்கு பேருந்து நிலையத்தை மாற்றியமைக்க நகரில் பல்வேறு அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு சாா்பில் கடையடைப்புப் போராட்டமும், மக்கள் நலக்குழு சாா்பில் மனித சங்கிலி போராட்டமும் நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து, ராசிபுரம் நகர மக்கள் வளா்ச்சி நலக்குழு என்ற அமைப்பின் சாா்பில் நூற்றுக்கணக்கானோா் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

முன்னதாக பழைய பேருந்து நிலையம், கடைவீதி, பூக்கடை வீதி வழியாக ஊா்வலமாக வந்த ராசிபுரம் நகர மக்கள் வளா்ச்சி நலக்குழுவினா், நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவலா் செல்வராஜுவிடம் (ஆணையா் பொறுப்பு) பேருந்து நிலையத்தை மாற்றம் செய்ய வேண்டும் என மனு அளித்தனா்.

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியவாறு புதிய பேருந்து நிலையம் அமைந்தால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும். நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும், வியாபாரத் தேவை, வெளியூா்களில் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு பயனுள்ளதாக அமையும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

இதில், திமுக வாா்டு நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், பெண்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.