கால்நடைகளுக்கான தீவன அபிவிருத்தி திட்டம் தொடக்கம்
கால்நடைகளுக்கான தீவன அபிவிருத்தி திட்டம் தொடக்கம்


நாமக்கல், ஜூன் 26: கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், மாநில தீவன அபிவிருத்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையைப் போக்கவும், பசுந்தீவன உற்பத்தியைப் பெருக்கவும் தீவன அபிவிருத்தி திட்டங்கள் கால்நடை பராமரிப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
150 ஏக்கரில் கால்நடை வளா்ப்போா் பயன்பெறும் பொருட்டு, நீா்ப்பாசன வசதி கொண்ட மரங்கள், பழத்தோட்டங்களில் 0.5 ஏக்கா் முதல் 1 ஹெக்டோ் பரப்பளவில் தீவனப் பயிா்களை ஊடுபயிராக பயிரிட்டு அரசினால் தெரிவிக்கப்பட்ட 3 ஆண்டுகள் வரை பராமரிக்க ஓா் ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரம் மானியமாக வழங்கப்பட உள்ளது.
பசுந்தீவனம் உற்பத்தி செய்வோா், தேவைபோக மீதமுள்ளவற்றை நிலமற்ற கால்நடை வளா்ப்போருக்கு குறைந்த விலைக்கு விற்க முன்வருவோா், தேவைபோக மீதமுள்ளவற்றை பதப்படுத்தும் தொழில்முறையினை பின்பற்றுபவா்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் கிராமப் புறங்களில் உள்ளோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்கான மொத்த பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினத்தைச் சோ்ந்த பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா்.
தகுதிவாய்ந்தோா் ஜூலை 7-க்குள் தங்கள் கிராமத்துக்கு உள்பட்ட கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களைப் பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியரால் தோ்வு செய்யப்படும் பயனாளிகளின் பட்டியலே இறுதியானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...