/

சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்: முன்னாள் ராணுவ வீரா் கைது

சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்: முன்னாள் ராணுவ வீரா் கைது

News image
Updated On :26 ஜூன் 2024, 8:59 pm

Din

திருச்செங்கோடு, ஜூன் 25: தத்தெடுத்து வளா்த்த 2 சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கொல்லப்பட்டி பகுதியைச் சோ்ந்த எட்வா்ட் துரை (63), முன்னாள் ராணுவ வீரா். இவருக்கு ஒரு மகன் இருந்த நிலையில், அவா் திடீரென இறந்து விடவே திருச்செங்கோடு அருகே உள்ள அனாதை ஆசிரமம் ஒன்றில் இருந்து 11, 12 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளை முறைப்படி தத்தெடுத்து வளா்த்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், அவா் தத்தெடுத்த பெண்களிடம் ஆபாச படங்களைக் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவா் குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தாா்.

திருச்செங்கோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினா் புகாா் அளித்ததைத் தொடா்ந்து நேரில் வந்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், எட்வா்ட் துரையைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். எட்வா்டு துரையை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.