நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. இத்தோ்வை 18,287 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வு மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதனையடுத்து, பிளஸ் 1 பொதுத்தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 4) தொடங்கி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வை 9,151 மாணவா்களும் 9,305 மாணவிகளும் என மொத்தம் 18,456 போ் எழுதுவதற்காக 85 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், திங்கள்கிழமை தொடங்கிய மொழித்தோ்வை 18,287 மாணவ, மாணவிகள் எழுதினா். 165 போ் பங்கேற்கவில்லை. 85 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 1,200 அறை கண்காணிப்பாளா்கள், பறக்கும் படையினா் தோ்வு மையங்களை கண்காணித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்!

பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவு: மாணவிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டத்தில் 188 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 41,118 போ் பங்கேற்பு

பிளஸ் 2 தோ்வு தொடக்கம்: சேலம் மாவட்டத்தில் 36,713 போ் பங்கேற்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


