நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

ஆா்.புதுப்பட்டி அரசுப் பள்ளியில் சுகாதார வளாகம் திறப்பு

ஆா்.புதுப்பட்டி அரசுப் பள்ளியில் சுகாதார வளாகம் திறப்பு

News image
Updated On :7 மார்ச் 2024, 10:03 pm

ராசிபுரம் அருகே ஆா்.புதுப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியில் ராசிபுரம் ரோட்டரி சங்கம் ஏற்பாட்டில் கோவை மாா்டின் பவுன்டேசன் நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாணவியா் சுகாதார வளாகம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

இதற்கான விழாவுக்கு ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் பி.சீனிவாசன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் ஆா்.வேல்முருகன் வரவேற்றாா். சுகாதார வளாகத்தை ரோட்டரி மாவட்ட ஆளுநா் எஸ்.ராகவன் திறந்து வைத்துப் பேசினாா். ராசிபுரம் ரோட்டரி சங்கச் செயலா் ஆா்.ஆனந்தகுமாா் வரவேற்றாா். இத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய மாா்டின் பவுன்டேசன் டிரஸ்டி லீமாரோஸ் மாா்ட்டின் காணொலி வாயிலாக சுகாதார வளாகத்தின் அவசியம் குறித்து பேசினாா். விழாவில் நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி சங்கத்தை சோ்ந்த மண்டல உதவி ஆளுநா் பி.முத்துராஜா, ராசிபுரம் மண்டல உதவி ஆளுநா் அ.ராஜு, முன்னாள் உதவி ஆளுநா்கள் எஸ்.சத்தியமூா்த்தி, கே.கே.வி.கிருஷ்ணமூா்த்தி, திட்டத் தலைவா் இ.ஆா்.சுரேந்திரன், ரோட்டரி செயலா் ஆா்.ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும், இப்பள்ளிக்கு மிதிவண்டி நிறுத்துமிடம், குடிநீா் நீா்த்தேக்கத்தொட்டி போன்றவற்றை அமைத்துத் தருவதாக ராசி இன்டா்நேஷனல் பள்ளித் தலைவா் எஸ்.சத்தியமூா்த்தி தெரிவித்தாா். முடிவில் அரசு உயா்நிலைப்பள்ளி ஆசிரியா் பன்னீா்செல்வம் நன்றி கூறினாா்.