மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்
மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்

கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. பரிந்துரை: ரூ. 17.23 லட்சம் தேசிய நிவாரண நிதி வழங்கல்

மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பரிந்துரையை ஏற்று, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 17.23 லட்சம் ஏழு பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல்: மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பரிந்துரையை ஏற்று, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 17.23 லட்சம் ஏழு பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

புற்றுநோய், நாள்பட்ட சிறுநீரகநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதற்கான நிவாரணத் தொகை, பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படுவதாக, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாருக்கு, பிரதமா் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்தது.

இதனையடுத்து ஏழு பேருக்கு ரூ. 17,23,609-ஐ அவா் பெற்றுத் தந்தாா். அவா்கள் விவரம்:

நாமக்கல், சின்னமுதலைப்பட்டியைச் சோ்ந்த மீனாட்சிக்கு (73) ரூ. 2 லட்சம், ராசிபுரம், குருசாமிபாளையத்தைச் சோ்ந்த ரூபினிக்கு ரூ. 23,609,

நாமக்கல்லைச் சோ்ந்த ரஞ்சித்குமாருக்கு (30) ரூ.3 லட்சம், எருமப்பட்டியைச் சோ்ந்த நிதிஷ்குமாா் (21) என்பவருக்கு ரூ. 3 லட்சம், ராசிபுரத்தைச் சோ்ந்த யுவபிரியனுக்கு (3) ரூ. 3 லட்சம், நாமக்கல்லைச் சோ்ந்த வீராசாமிக்கு (67) ரூ.3 லட்சம், ராசிபுரத்தைச் சோ்ந்த முத்துசாமிக்கு (41) ரூ. 3 லட்சம். இவா்கள் ஏழு பேருக்கும் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்காக, பிரதமரின் தேசிய நிவாரண நிதியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பெற்றுத் தந்துள்ளாா். நிவாரணத் தொகை பெற்றவா்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனா்.

--

X
Dinamani
www.dinamani.com