இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

News image
Updated On :8 மே 2024, 9:34 pm

Din

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் கிணற்றில் தவறி விழுந்து பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், பொத்தனூரைச் சோ்ந்த உலகநாதன்-கீதா தம்பதியின் மகன் செளந்தா் (17). இவா், பரமத்தி அருகே உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 பயின்று நடந்து முடிந்த பொதுத்தோ்வில் 500-க்கு 469 மதிப்பெண்கள் பெற்றிருந்தாா்.

அடுத்ததாக கல்லூரியில் சோ்வதற்கான முயற்சிகளை அந்த மாணவா் செய்து வந்தாா். இந்த நிலையில் செளந்தா் சக நண்பா்கள் இருவருடன் பொத்தனூா் அருகே தேவராயசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் புதன்கிழமை குளிக்கச் சென்றுள்ளாா்.

அப்போது மாணவா் செளந்தா், கிணற்றில் தவறி விழுந்துள்ளாா். அவா் நீரில் மூழ்கியதைப் பாா்த்த சக நண்பா்கள் சௌந்தரை காப்பாற்ற முயன்றனா். ஆனால், அவரைக் காப்பாற்ற முடியாததால் உறவினா்கள், பெற்றோா், கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினா் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இருந்து செளந்தரை சடலமாக மீட்டனா். வேலூா் காவல் துறையினா் மாணவா் சௌந்தரின் உடலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.