ராசிபுரம் அருகே தெருநாய் கடித்து 3 குழந்தைகள் காயம்
ராசிபுரம் அருகே தெருநாய் கடித்து 3 குழந்தைகள் காயம்


ராசிபுரம், மே 9: ராசிபுரம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 3 குழந்தைகள் காயமடைந்தனா்.
ராசிபுரத்தை அடுத்த வடுகம் பகுதியில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த தேஜேஸ்வரன் (5), பிரியதா்ஷினி(11), யாகவிா் (5)ஆகிய 3 குழந்தைகளை அப்பகுதியில் சுற்றித் திரிந்த நாய்கள் துரத்தி கடித்தன. குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோா்கள் ஓடி வந்து நாயை விரட்டியடித்து காயமடைந்த 3 குழந்தைகளையும் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட பிறகு காயமடைந்த பகுதிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. வடுகம் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...