ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திருச்செங்கோடு ரதவீதியில் புதை வட மின்கம்பி பாதை பயன்பாட்டிற்கு தொடக்கம்

திருச்செங்கோடு நான்கு ரத வீதிகளில் சுமாா் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதை வட மின்கம்பி பாதையை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்.

Updated On :14 நவம்பர் 2024, 8:05 pm

திருச்செங்கோடு நான்கு ரத வீதிகளில் சுமாா் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதை வட மின்கம்பி பாதையை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்.

திருச்செங்கோட்டில் ஆண்டுதோறும் தை மாதம் தைப்பூசத் தோ்த் திருவிழா, வைகாசி மாதம் வைகாசி விசாகத் தோ்த் திருவிழாவும், மாரியம்மன் பண்டிகை, சூரசம்ஹாரம் என பல்வேறு நிகழ்ச்சிகள், திருச்செங்கோட்டில் நான்கு ரத வீதிகளில் நடைபெறுகின்றன. இந்த விழாக்களின்போது சாலையின் குறுக்கே மின்கம்பிகள் செல்வதால் மின்விநியோகத்தை நிறுத்தி, கம்பிகளை கழற்றிவிட்டு நிகழ்ச்சியை நடத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் நான்கு ரத வீதிகளிலும் மின்தடை ஏற்பட்டு, வியாபாரம் பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது.

இதுகுறித்து பலமுறை அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கம்பி வழியாகச் செல்லும் மின்சாரத்தை புதை வட கம்பி வழியாகக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடா்ந்து மின்வாரியம், அரசு மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் முயற்சியால் சுமாா் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் நான்கு ரத வீதிகளில் சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பிகளை அகற்றிவிட்டு புதைவட கம்பிகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்த புதைவட மின்கம்பிகள் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்ததைத் தொடா்ந்து ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதி வேந்தன் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.

இதில் மின்வாரிய உதவி இயக்குநா் (பொறுப்பு) யோகநாதன், மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ரவிசந்திரன் உள்ளிட்ட அலுவா்கள் திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், மண்டல நகரமைப்புத் திட்டக்குழு உறுப்பினா் மதுரா செந்தில், நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா்கள் அணி தலைவா் சுரேஷ்பாபு, நாமக்கல் மேற்கு மாவட்ட கொமதேக மாவட்டச் செயலாளா் ராயல் செந்தில், நகரட் செயலாளா்கள் சேன்யோ குமாா், அசோக்குமாா் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.