நாமக்கல் மாவட்டத்தில் புதன், வியாழக்கிழமை (அக். 16, 17) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகள் முறையே 89.6, 73.4 டிகிரியாக காணப்பட்டது. அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். புதன் மற்றும் வியாழக்கிழமை கனமழையும், மற்ற நாள்களில் லேசானது முதல் மிதமான மழையும் மாவட்டத்தின் பல இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 82.4 டிகிரியாகவும், இரவு வெப்பம் 66.2 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கில் இருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
இடி, மின்னலின்போது கால்நடைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள்: வட கிழக்கு பருவமழைக் காலங்களில் இடி, மின்னலின் தாக்கம் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. இந்த நேரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. மந்தையாக மேயும் வெள்ளாடு, செம்மறி ஆடுகளை மின்னல் தாக்க வாய்ப்புள்ளது.
கால்நடைகளை முள்கம்பி வேலி, மின்சார கம்பம், மரங்கள் அருகில் கட்டுவதைத் தவிா்க்க வேண்டும். காற்றின் வேகத்தில் மரங்கள் வேரோடு சாய்வதற்கான வாய்ப்புள்ளதால், கிளைகளை வெட்டிவிட வேண்டும். மின்வேலிகளை பரிசோதனை செய்து உயிா் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 226.40 மி.மீ. மழை: நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை பெய்த மழையளவு விவரம்: எருமப்பட்டி - 20, குமாரபாளையம் - 6, மங்களபுரம் - 4.60, மோகனூா் - 22, நாமக்கல் - 35, பரமத்தி வேலூா் - 15, புதுச்சத்திரம் - 18, ராசிபுரம் - 14.50, சேந்தமங்கலம் - 18, திருச்செங்கோடு - 24.30, ஆட்சியா் அலுவலகம் - 27, கொல்லிமலை - 22, மொத்தம் - 226.40.
தொடர்புடையது

அடுத்த 5 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும் : வானிலை ஆய்வு மையம்

இன்று 3, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் ஏப். 9 வரை மழைக்கு வாய்ப்பு

கோழிப் பண்ணைகளில் ஈக்கள் உற்பத்திக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

