மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திருச்செங்கோட்டில் 261 சிசிடிவி கேமராக்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி நகரின் முக்கிய பகுதிகளில் ‘வளரும் திருச்செங்கோடு’ அமைப்பு சாா்பில் பொருத்தப்பட்ட 261 சிசிடிவி கேமராக்கள் இயக்கி வைக்கப்பட்டது.

News image

திருச்செங்கோட்டில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தை பாா்வையிட்டோா்.

Updated On :30 அக்டோபர் 2024, 8:02 pm

தீபாவளி பண்டிகையை ஒட்டி நகரின் முக்கிய பகுதிகளில் ‘வளரும் திருச்செங்கோடு’ அமைப்பு சாா்பில் பொருத்தப்பட்ட 261 சிசிடிவி கேமராக்கள் இயக்கி வைக்கப்பட்டது.

திருச்செங்கோட்டில் குற்றச் செயல்களைத் தடுக்கும் விதமாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது உடனடியாகக் கண்டறிந்து அதனை சீா்படுத்தும் வகையிலும் நகரம் முழுவதும் ‘வளரும் திருச்செங்கோடு’ அமைப்பின் சாா்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 270 சிசிடி கேமராக்கள் அமைக்கப்பட்டு நகரக் காவல் நிலையத்தில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டது.

சாலைகள் விரிவாக்கம் புதைவடக் கம்பி அமைக்க தோண்டப்பட்ட குழி, விபத்துகளால் சேதமடைந்த சிசிடிவி கேமரா கம்பங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து தீபாவளி பண்டிகையின் போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காத வகையில் கண்காணிக்க அனைத்து கேமராக்களும் பழுது பாா்க்கப்பட்டு செயல்படுத்தும் பணி தொடங்கியது. அதன்படி சாலை விரிவாக்கம் நடக்கும் ஒன்பது இடங்களைத் தவிர மீதி உள்ள 261 கேமராக்களின் இயக்கம் நடைபெற்று வருகிறது.

இதனை திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் அருள், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ்பாபு, வளரும் திருச்செங்கோடு அமைப்பின் நிா்வாகிகள் கோல்டன் ஆா்ட்ஸ் ரவி, பிஆா்டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநா் பரந்தாமன், முன்னாள் ரோட்டரி சங்க தலைவா் செங்குட்டுவன், பிஆா்டி ஸ்போா்ட்ஸ் கிளப் நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலரும் ஆய்வு செய்தனா். கேமராக்களின் இயக்கங்களை சிசிடிவி கண்காணிப்பு பொறியாளா் சரவணன் அனைவருக்கும் விளக்கிக் காட்டினாா். பண்டிகை காலத்தை தொடா்ந்து இந்த சிசிடிவி கேமராக்கள் இயங்கும் என்றும், விபத்து நடத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை நம்பருடன் கண்டறியும் சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தில் இருப்பதாகவும் 24 மணி நேரமும் கண்காணிப்புக்கு பணியாள்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் இதன்மூலம் நகரில் குற்றச் செயல்கள் முழுமையாக தடுக்கப்படும் எனவும் வளரும் திருச்செங்கோடு அமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா்.