6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல்லில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்லில், கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் இரண்டாம் கட்ட ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image
நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கிராம நிா்வாக அலுவலா்கள்.
Updated On :19 செப்டம்பர் 2024, 11:29 pm

Din

நாமக்கல்லில், கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் இரண்டாம் கட்ட ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் சரவணன், மாவட்ட அமைப்புச் செயலாளா் பிரபா ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ஆா்.லட்சுமி நரசிம்மன், மாவட்ட இணை செயலாளா் குமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். அப்போது ‘மற்ற துறை பணிகளை கிராம நிா்வாக அலுவலா்கள் மீது திணிக்கக் கூடாது. கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும். ஜன.8-இல் நடைபெற்ற பேச்சுவாா்த்தை உடன்பாடுகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மின்னணு அளவை பணியை புறக்கணிப்பது’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஏற்கெனவே செப்.9-இல் வட்டாட்சியா் அலுவலகம் முன்பும், 19-இல் கோட்டாட்சியா் அலுவலகத்திலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் வரும் 30-இல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.