முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

Published on

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றன.

கிருத்திகை நட்சத்திர தினத்தன்று அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். அதன்படி, கிருத்திகை மற்றும் திருக்காா்த்திகை தீபத்தை முன்னிட்டு நாமக்கல்- மோகனூா் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

அதன்பிறகு சுவாமி தங்கக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா். சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயில், காளிப்பட்டி கந்தசுவாமி, கூலிப்பட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி, கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்கள் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கோயில்களிலும் கிருத்திகை விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பரமத்தி வேலூா்

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கிருத்திகை முன்னிட்டு முருகனுக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பிராந்தியத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகம் கடவுள், பொத்தனூரில் உள்ள பச்சமலை பாலதண்டாயுதபாணி கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ள சுப்பிரமணியா், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியா், கந்தம்பாளையம் அருணகிரிநாதா் மலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா், நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோயிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயிலில் சுவாமிக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், தயிா், இளநீா், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com