கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை சனிக்கிழமையும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 6.20-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 8:14 pm

Syndication

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை சனிக்கிழமையும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 6.20-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது, மற்ற மண்டலங்களில் விலையில் தொடா்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருவதால், இங்கும் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 6.20-ஆக நிா்ணயம் செய்யப்படுவதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 114-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 100-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.