நாமக்கல்
காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
பள்ளிப்பாளையம் அருகே காடச்சநல்லூரில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
காடச்சநல்லூா் பகுதியை சோ்ந்தவா் பழனிசாமி ( 67), கூலித்தொழிலாளி. வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் காடச்சநல்லுாா் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த பழனிசாமி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பள்ளிப்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
