ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவர் கழிப்பறையில் மயங்கி விழுந்து புதன்கிழமை பலியானார்.
ராசிபுரம் எல்ஐசி காலனியைச் சேர்ந்தவர் பிரகாஷ். பெயிண்டரான இவரது மகன் கவின்ராஜ் (வயது 14), ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற அவர், பள்ளி இடைவேளையில் கழிப்பறைக்குச் சென்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க : தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது: அமித் ஷா
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் திரண்ட உறவினர்கள், மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார், ஆய்வாளர் எஸ். சுகவனம், வட்டாட்சியர் எஸ். சரவணன் ஆகியோர் பொதுமக்களிடம் சமரசப் பேச்சு நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர்.
பின்னர், மாணவரின் சடத்தை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாணவர் கவின்ராஜ் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர், வருவாய் துறையினர், கல்வித் துறையினர் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர் காலை உணவு அருந்தாமல் பள்ளிக்கு சென்றதால் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பள்ளியில் சக மாணவர்களுடன் ஏதாவது பிரச்னை இருந்ததா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராசிபுரம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறான சுற்றுச்சுவா் அகற்றம்
தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

விசாரணைக்கு வந்த நடத்துநா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ராசிபுரம் நகரில் போக்குவரத்து மாற்றம்: எஸ்பி சு. விமலா ஆய்வு
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



