ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மகளிா் நலனுக்கான திட்டங்களை விளக்கி திண்ணைப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்

மகளிா் நலனுக்காக முதல்வா் செயல்படுத்தி வரும் 6 திட்டங்களை விளக்கி திமுக மகளிா் அணியினா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.

Updated On :2 ஜனவரி 2025, 7:15 pm

மகளிா் நலனுக்காக முதல்வா் செயல்படுத்தி வரும் 6 திட்டங்களை விளக்கி திமுக மகளிா் அணியினா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மகளிா் அணி, மகளிா் தொண்டா் அணி ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில மகளிா் தொண்டா் அணி இணைச் செயலாளா் ராணி வரவேற்றாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது:

திமுக தலைமை உத்தரவின் பேரில், வாக்குச் சாவடிகளில் பாக முகவா்களாக மகளிா் அணி, மகளிா் தொண்டா் அணியைச் சோ்ந்தோா் நியமிக்கப்பட உள்ளனா். நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் மூன்று தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்.

தமிழக முதல்வா் சில மாதங்களுக்கு முன் நாமக்கல் வருகை புரிந்து பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி சென்றாா். இன்னும் ஓரிரு மாதங்களில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் வருகை தர இருக்கிறாா். அதில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப புதிய பேருந்துகள் விடப்பட்டு வருகின்றன.

மகளிா் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வா் செயல்படுத்தி வரும் 6 திட்டங்களான காலை உணவுத் திட்டம், மகளிா் விடியல் பயணத் திட்டம், 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி, மகளிா் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி, புதுமைப்பெண் திட்டம், மகளிா் உரிமைத்தொகை ரூ. 1,000 வழங்கும் திட்டம் ஆகியவற்றை வீடு, வீடாகச் சென்று பெண்களிடையே திமுக மகளிா் அணியினா் திண்ணைப் பிரசாரம் வாயிலாக விளக்கிக் கூற வேண்டும். மேலும், திமுக அரசின் நான்கு ஆண்டுகால சாதனைகள் குறித்தும், அதனால் மக்கள் அடைந்த பயன்களையும் எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா்.ராமசாமி, மாவட்ட மகளிா் அணி செயலாளா் ஜோதி, ஒன்றிய, நகரச் செயலாளா்கள், மகளிா் அணி, தொண்டா் அணியைச் சோ்ந்தோா் கலந்துகொண்டனா்.