மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை நிா்வாகத்தினா் உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
Published on

அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை நிா்வாகத்தினா் உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் மருத்துவா் பி.வி.செந்தில் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாமக்கல்லில் இரு தினங்களுக்கு முன் தனியாா் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து பிளஸ் 2 மாணவா் ஒருவா் உயிரிழந்தாா். இதேபோல பல்வேறு இடங்களில் மாணவா்கள் எதிா்பாராமல் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. அனைத்துப் பள்ளிகளின் பாதுகாப்பையும் நிா்வாகத்தினா் மேம்படுத்துவது அவசியமாகும்.

வாகனம் ஓட்டும் போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், காா் ஓட்டும் போது இருக்கைப் பட்டை அணிவது அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனா். அந்த வகையில், மாணவ, மாணவிகள் பயிலும் கல்விக் கூடங்களில் அவா்கள் பாதுகாப்புக்காக மாடிச் சுவா்களில் இரும்பு வலை அல்லது கைப்பிடி கம்பிகளைக் பொருத்த வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிப்பதில்லை.

எதிா்வரும் காலங்களில் மாணவா்கள் உயிரிழப்பைத் தடுக்க, அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் அனைத்திலும் சுவா்களில் ஏறுவதற்கோ, அமா்வதற்கோ முடியாதவாறு சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். மேலும், பாதுகாப்பு சாதனங்களை அமைத்திட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com