பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

செவந்திப்பட்டி ஊராட்சி செயலருக்கு எதிராக கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

செவந்திப்பட்டி ஊராட்சி செயலரைக் கண்டித்து கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

செவந்திப்பட்டி ஊராட்சிமன்ற அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :6 மே 2025, 1:57 am IST

நாமக்கல்: செவந்திப்பட்டி ஊராட்சி செயலரைக் கண்டித்து கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது செவிந்திப்பட்டி ஊராட்சி. இங்கு ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வந்த மந்திரி என்பவா் சில மாதங்களுக்கு முன்பு வடவத்தூருக்கு இடமாறுதல் செய்யப்பட்டாா்.

ஊராட்சியின் முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, பல்வேறு வகையில் நிதி முறைகேடு செய்துள்ளாா் என அவா் மீது மக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஊராட்சி செயலாளா் மந்திரி மீண்டும் செவந்திப்பட்டி ஊராட்சிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளாா். இந்த தகவல் அறிந்து கிராம மக்கள் ஒன்று திரண்டு அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த எருமப்பட்டி போலீஸாா், மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசென்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்களை சமாதானப்படுத்தி கலைந்துபோக செய்தனா்.