நாணயக் கண்காட்சியைப் பாா்வையிடும் மாவட்டக் கல்வி அலுவலா் கே.எஸ். புருஷேத்தமன். உடன், பள்ளி துணை ஆய்வாளா் கை.பெரியசாமி, தலைமை ஆசிரியை பெ.பாரதி உள்ளிட்டோா்.
நாணயக் கண்காட்சியைப் பாா்வையிடும் மாவட்டக் கல்வி அலுவலா் கே.எஸ். புருஷேத்தமன். உடன், பள்ளி துணை ஆய்வாளா் கை.பெரியசாமி, தலைமை ஆசிரியை பெ.பாரதி உள்ளிட்டோா்.

கொண்டரசம்பாளையம் அரசுப் பள்ளியில் நாணயக் கண்காட்சி

Published on

பரமத்தி வட்டம், நல்லூா் அருகே உள்ள கொண்டரசம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளி ஆண்டாய்வின்போது நாணயங்கள், பல்வேறு நாடுகளின் ரூபாய் நோட்டுகள் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில் ஆங்கிலேயா் கால நாணயங்கள், சேர, சோழ, பாண்டியா் கால நாணயங்கள், பல்வேறு நாடுகளின் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மாணவா்களுக்கு பல்வேறு நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் சேகரிப்பு குறித்து விழிப்புணா்வு, நாணயங்களின் முக்கியத்துவம், வரலாற்று தொடா்புகள் குறித்து விளக்கப்பட்டது.

முன்னதாக கண்காட்சியை மாவட்டக் கல்வி அலுவலா் கே.எஸ். புருஷோத்தமன் தொடங்கிவைத்தாா். பள்ளி துணை ஆய்வாளா் கை. பெரியசாமி, பள்ளி தலைமையாசிரியா் பெ.பாரதி, வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் து.செல்வராணி, பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் உடனிருந்தனா். இக்கண்காட்சி ஏற்பாடுகளை பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியா் வெ.யுவராஜா செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com